Thursday, May 9, 2024
Home » Suzuki WagonR வாகனங்களின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான மீளப்பெறல் அறிவிப்பு

Suzuki WagonR வாகனங்களின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான மீளப்பெறல் அறிவிப்பு

by mahesh
March 19, 2024 11:42 am 0 comment

ஜப்பானின் Suzuki Motor Corporation நிறுவனம், ஜப்பானிய Suzuki WagonR வகை வாகனங்களின் எரிபொருள் தொகுதி தொடர்பான பாதுகாப்பு அம்சத்திற்காக மீளப்பெறுதலை அறிவித்துள்ளது. இலங்கையில் Suzuki வாகனங்களின் ஒரே விநியோகஸ்தர் எனும் வகையில், Associated Motorways (Private) Limited (AMW) Suzuki WagonR உரிமையாளர்களின் பாதுகாப்பையும் திருப்தியையும் உறுதி செய்ய இதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

பாதுகாப்பு அம்ச மீளப்பெறல் நடவடிக்கையானது, எரிபொருள் தொகுதியில் உள்ள எரிபொருள் தூய்மையின்மை அடைப்புகளை சீர் செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இது கவனிக்கப்படாமல் விடப்பட்டால், போதிய எரிபொருளின்மை தொடர்பான உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் வெளிப்படுத்தப்படாத நிலை ஏற்படுவதால், எஞ்சின் ஸ்தம்பிதமடைய வழிவகுக்கும். இது தொடர்பில் பாதிப்பைக் கொண்ட வகைகளில் Suzuki WagonR Premium, Suzuki WagonR FX/FZ, Suzuki Spacia, Suzuki Stingray உள்ளிட்டவை அடங்குகின்றன.

இலங்கையில் சுமார் 32,500 Suzuki WagonR வாகனங்கள் இந்த பாதுகாப்பு அம்ச மீளப் பெறுகை வகையில் உள்ளடங்குகின்றன. அவற்றில் சுமார் 3,800 வாகனங்கள் ஏற்கனவே மீளப் பெறலுக்காக பெறப்பட்டு சீர் செய்யும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், கணனிகள் அல்லது கையடக்கத் தொலைபேசிகளில் suzuki.lk/wagonrrecall எனும் இணையத்தளத்திற்குச் சென்று, உரிய chassis இலக்கத்தை வழங்குவதன் மூலம், தங்களது வாகனம் மீளப் பெறுதலுக்கு உட்படும் பிரிவில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.

மீளப் பெறும் நடவடிக்கையில் தமது வாகனம் உள்ளடங்கியுள்ளமை உறுதி செய்யததைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் 0117 609609 எனும் இலக்கத்தின் ஊடாக AMW நிறுவனத்தின் தொடர்பு மையத்தை தொடர்பு கொண்டு மீளப் பெறும் நடவடிக்கைக்கு முன்பதிவு செய்யுமாறு கோரப்படுகின்றனர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில், தொடர்பு மையத்தால் குறிப்பிடப்படும் AMW கிளைகளில் மாத்திரம், மீள் பெறுகை மற்றும் பாகத்தின் மாற்றீடு ஆகியன முன்னெடுக்கப்படும்.

Suzuki WagonR உரிமையாளர்களுக்கு மன நிம்மதியை உறுதி செய்யும் வகையில், பாகத்தின் மாற்றீடு இலவசமாக முன்னெடுக்கப்படும் என, AMW தமது வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறது. தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்தியே தமது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என அறிவித்துள்ள AMW, இந்த சிக்கலை விரைவாகவும் திறமையாகவும் தீர்க்க உறுதி பூண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT