Monday, May 20, 2024
Home » டயலொக் ஆசிஆட்டாவின் Genie மற்றும் Dialog Finance ஆகிய சேவைகளுக்கு விருது

டயலொக் ஆசிஆட்டாவின் Genie மற்றும் Dialog Finance ஆகிய சேவைகளுக்கு விருது

by mahesh
May 8, 2024 8:00 am 0 comment

டயலொக் ஆசிஆட்டாவின் genie மற்றும் Dialog Finance PLC ஆகிய சேவைகள் LankaPay Technnovation Awards 2024 விருது விழாவில் டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கான பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது. புதுமையான மற்றும் உள்ளடக்கிய நிதித் தீர்வுகளுடன் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் டயலொக் முன்னெடுத்து வரும் முயற்சிகளின் பிரதிபலிப்பாகவே இந்த அங்கீகாரம் கருதப்படுகின்றது.

Genie இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது: இதில் முதலாவது விருதானது, ‘மிகவும் பிரபலமான டிஜிட்டல் கொடுப்பனவு தயாரிப்பு – Fintech பிரிவு’ க்கு இலங்கை நுகர்வோரால் வாக்களிக்கப்பட்டு வெல்லப்பட்டுள்ளது. இரண்டாவது விருதானது, ‘Lanka QR – Fintech பிரிவு மூலம் சில்லறை விற்பனையாளர் கொடுப்பனவுகளுக்கான சிறந்த மொபைல் Application’ என வெல்லப்பட்டுள்ளது. இவ்வாறு Genie இரண்டு விருதுகளை வென்றமையானது, இலங்கையில் விருப்பமான டிஜிட்டல் கட்டண தளமாக genie அங்கீகாரத்தை பெற்றுள்ளதை குறிக்கின்றது எனலாம்.

மேலும், Dialog Finance PLC ஆனது, ‘சிறந்த டிஜிட்டல் கொடுப்பனவு மூலோபாயத்திற்கான ஆண்டின் நிதி நிறுவனத்திற்கான’ தங்க விருதையும், ‘சிறந்த டிஜிட்டல் கொடுப்பனவுகள்’ மற்றும் ‘வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரிவில் சிறந்த வாடிக்கையாளர் வசதி’ ஆகியனவற்றிற்கு வெள்ளி விருதுகளையும், மேலும் சிறந்த ‘நிதி உள்ளிணைக்கை’ என்பதற்கான தகுதி விருதையும் பெற்று சிறப்பை சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT