The Little Minds Strong Values (LMSV), Rotary Honda Purudu Championship Season 03 நிகழ்வின் இறுதிப்போட்டி அண்மையில் கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இப்போட்டியில் நாடெங்கிலுமிருந்து 4,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்குபற்றியதுடன், இறுதிப் போட்டியில் 125 சிறுவர்கள் பங்குபற்றினர்.
கொழும்பு மெட்ரோபொலிட்டன் றோட்டரி கழகத்தால் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த ஆறு ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட்டு, றோட்டரி 3220 மாவட்டத்தின் மத்தியில் அனைத்து கழகங்களாலும் உள்வாங்கப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே சிறுவர்கள் மத்தியில் சிறந்த நெறிமுறைகளை வளர்ப்பது, அடுத்த தலைமுறையில் நாட்டில் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என றோட்டரி கழகம் நம்புகின்றது. எதிர்காலப் பிரஜைகளை வளர்த்து, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு வயதிலேயே சிறுவர்கள் மத்தியில் நேர்மறை சிந்தனைகள் மற்றும் மனப்பாங்குகளை ஊக்குவித்து, எளிமையான இசை, பாடல் வரிகளுடனும் மற்றும் கண்ணைக் கவரும் வீடியோ அனிமேஷன் தொழில்நுட்பத்துடனும் 32 சிங்கள மற்றும் தமிழ் பாடல்களை LMSV உபயோகிக்கின்றது. “களவெடுக்க வேண்டாம்”, “பொய் சொல்ல வேண்டாம்” ஆகிய நற்பழக்கவழக்கங்களை சிறுவர்களுக்கு வலுவாக எடுத்துச் சொல்லும் செய்தியை சிங்களத்தில் மிகவும் பிரபலமான “பூசணிக்காய் கள்வன்” என்ற பழமொழியானது பாடலாக மாற்றம் செய்யப்பட்டது. இதைப் போல் அனைத்து பாடல்களும் அவற்றுள் உட்பொதிந்துள்ள நற்பண்புகளுடன் வலுவான செய்திகளைக் கொண்டுள்ளன.
LMSV ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு, கல்வி அமைச்சுடனான ஒத்துழைப்பு காரணமாக கணிசமான அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டம் நாடளாவியரீதியில் 10,000 அரசாங்க பாடசாலைகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது.
யூனியன் வங்கி தனது புதிய digital zone ஐ கொழும்பு புறக்கோட்டை பகுதியில் திறந்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு 24/7 ஸ்மார்ட் வங்கியியல் சேவைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் தொடர்ச்சியான டிஜிட்டல் மேம்படுத்தல் செயற்திட்டங்களின் அங்கமாக இந்த புதிய அறிமுகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புறக்கோட்டை கிளையின் வாடிக்கையாளர்களுடன், Zone 1A வலய தலைமை அதிகாரி கசுன் டி சில்வா மற்றும் Trade Hub பிரிவு தலைமை அதிகாரி பிராங்க் நேசராஜா ஆகியோர் இந்த அறிமுக நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.