Tuesday, May 28, 2024
Home » “IT Gallery Hikvision Partner Summit 2024” வெற்றியை கொண்டாடும் IT Gallery

“IT Gallery Hikvision Partner Summit 2024” வெற்றியை கொண்டாடும் IT Gallery

by mahesh
May 15, 2024 9:00 am 0 comment

இலங்கையின் IT சேவைச் சந்தையில் முன்னணியில் திகழும் IT Gallery Computers Private Limited நிறுவனம், 2017 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வரும் அதன் வருடாந்த பங்குதாரர் ஒன்றுகூடலின் முக்கிய நிகழ்ச்சியான, “IT Gallery – Hikvision Partner Summit 2024” நிகழ்வை சமீபத்தில் முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்வு “New Security, New Success” (புதிய பாதுகாப்பு, புதிய வெற்றி) எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்றதோடு, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில் Hikvision இன் பங்காளிகளின் சிறந்த செயற்றிறனை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை அங்கீகரித்து கௌரவிக்க இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வானது, பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான சந்தையில் நவீன போக்குகள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தது. IT Gallery Computers Private Limited பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா, Hikvision உடனான IT Gallery இன் நீண்டகால கூட்டாண்மை குறித்து பெருமிதமடைவதாக தெரிவித்தார்.

“புத்தாக்க கண்டுபிடிப்புகள் தொடர்பான எமது அர்ப்பணிப்பு மற்றும் எமது பங்காளிகளுக்கான ஆதரவு ஆகியன, IT Gallery நிறுவனத்தை இலங்கையின் கண்காணிப்பு சந்தையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நம்பகமான மையமாக நிறுவியுள்ளது.” என அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT