Monday, May 20, 2024
Home » அரசாங்க அதிகாரிகளுக்கான விடுமுறை தொடர்பில் புதிய சுற்றறிக்கை

அரசாங்க அதிகாரிகளுக்கான விடுமுறை தொடர்பில் புதிய சுற்றறிக்கை

- விடுமுறை அனுமதியின்றி சமூகமளிக்காதவர்களுக்கு இராஜினாமா அறிவிப்பு

by Prashahini
May 9, 2024 2:11 pm 0 comment

கொவிட் -19 தொற்றுநோயின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக வெளிநாட்டில் இருந்து உரிய திகதியில் பணிக்கு திரும்பத் தவறிய அரச அதிகாரிகளின் விடுமுறை தொடர்பாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி இந்த சுற்றறிக்கை ஊடாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக உரிய திகதியில் அல்லது அதற்கு முன்னதாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை மற்றும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அங்கீகரிப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமூகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT