Monday, May 20, 2024
Home » குடும்ப சுகாதாரம்; யாழில் விழிப்புணர்வு செயலமர்வு

குடும்ப சுகாதாரம்; யாழில் விழிப்புணர்வு செயலமர்வு

by Gayan Abeykoon
May 9, 2024 5:02 pm 0 comment

யாழ். நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவர்களுக்கு குடும்ப சுகாதாரம் தொடர்பாக நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை  விழிப்புணர்வு செயலமர்வு நடத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மகப்பேற்று மற்றும் பெண்ணியல் மருத்துவத்துறையும் சமூக மருத்துவத்துறையும் இணைந்து நடத்தி வரும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான செயற்றிட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட சமூக சுகாதார உதவியாளர்கள்  விழிப்புணர்வு செயலமர்வை நடத்தினர்.  இதன்போது இனப்பெருக்க சுகாதாரம், இளவயது திருமணம், பால்நிலை வன்முறை மற்றும் குழந்தை பேற்றுக்கு பின்னரான சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக அவர்கள் தெளிவூட்டினர்.  சர்வதேச மருத்துவ நிறுவனமான ஐ.எம்.எச்.ஓ. நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த  விழிப்புணர்வு செயலமர்வு  கடந்த ஒன்றரை வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT