Tuesday, May 21, 2024
Home » பாகிஸ்தான் வாக்கெடுப்பு முடிவுகள் ‘கையாளப்பட்டது’ குறித்து விசாரணை நடத்த இம்ரான் தரப்பு கோரிக்கை

பாகிஸ்தான் வாக்கெடுப்பு முடிவுகள் ‘கையாளப்பட்டது’ குறித்து விசாரணை நடத்த இம்ரான் தரப்பு கோரிக்கை

by Rizwan Segu Mohideen
May 9, 2024 6:17 pm 0 comment

ககருக்கும் அப்பாஸிக்கும் இடையே சூடான வாக்குவாதத்தின் பின்னர் பாகிஸ்தான் வாக்கெடுப்பு முடிவுகளை ‘கையாளுவது’ குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் (பிரிஐ)கோரியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் காபந்து பிரதமர் அன்வாருல் ஹக் ககருக்கும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் தரப்பு (PML-N) தலைவர் ஹனிப் அப்பாஸிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) சுதந்திரமான விசாரணையைக் கோரியுள்ளதாக தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு தலைவர்களுக்கிடையேயான சூடான கருத்துப் பரிமாற்றம், அதன் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்துவதாக அமைந்திருப்பதாக பிடிஐ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ககருக்கும் அப்பாஸிக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தைப் பரிமாற்றத்திற்குப் பிறகு, கோதுமை இறக்குமதித் திட்டம் மற்றும் தேர்தல் முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க நீதித்துறை ஆணைக்குழுவொன்றை பிரிஐ கோரியுள்ளது. தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர முழுமையான விசாரணையை கட்சி செய்தித் தொடர்பாளர் கோரியுள்ளார்.

ககருக்கும் அப்பாஸிக்கும் இடையே ஒரு பற்றமான மோதலை விபரிக்கும் செய்தி அறிக்கைகளுக்குப் பிறகு பிரிஐ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான பரபரப்பான கருத்துப் பரிமாற்றத்தின் போது தேர்தல் தொடர்பான படிவம்-47 பற்றிய சில தகவல்களை வெளிப்படுத்தினால் கட்சியின் செயற்பாடுகளை மறைக்க முடியாது போகும் என்று ககர் எச்சரிக்கை விடுத்ததாக செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஒரு தனியார் ஹோட்டலில் நடந்த சந்திப்பின் போது கோதுமை ஊழல் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றமாக கருத்துப் பரிமாற்றம் தொடங்கியது, இந்த விடயத்தை நன்கு அறிந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது கோதுமை ஊழலுக்கு பாகிஸ்தானின் காபந்து பிரதமராக இருந்த ககரின் பதவிக்காலத்தை குற்றம் சாட்டியதற்காக அப்பாஸி விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இரு தலைவர்களுக்கும் இடையேயான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இம்ரான் கான் தரப்பு கோரியுள்ளது.

பொறுப்புக்கூறலின் அவசியத்தை பிடிஐ செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளதோடு தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, தேர்தல் முறைகேடு மற்றும் தவறான நிர்வாகத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பழியை மாற்றுவதை நாடுகின்றனர் என்று தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன், செய்தி வெளியிட்டுள்ளது.

ககர் தலைமையிலான காபந்து அரசாங்கத்தின் கீழ் கூறப்படும் தவறான நிர்வாகத்தின் விளைவுகளை, குறிப்பாக கோதுமை நெருக்கடி, விவசாயிகளை பாதித்துள்ளது மற்றும் விலையுயர்ந்த கோதுமை இறக்குமதியை அவசியமாக்கியதன் விளைவுகளை செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார். கோதுமை இறக்குமதி விசாரணையை மத்திய அரசு கையாண்டதை இம்ரான் கானின் கட்சி விமர்சித்தது. இது தவறு செய்பவர்களைக் காப்பாற்றும் ‘சந்தேகத்திற்குரிய நிகழ்வு’ என்றும் அந்தக் கட்சி கூறியது.

வியாழன் அன்று செய்தியாளர் மாநாட்டில் பேசிய பிடிஐ தலைவர் கோஹர், ” பொதுத் தேர்தலில் நாங்கள் 180 இடங்களை வென்றோம். எங்களுக்கரிய ஒதுக்கீடுகள் படிவம் 47 மூலம் ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.”

கூறப்படும் மோசடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் பிடிஐ தலைவர் வலியுறுத்தினார்.” ஆனால் அந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை” என்று கோஹர் குறிப்பிட்டார்.

“மக்கள் ஆணை எவ்வாறு திருடப்பட்டது என்பதை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர 300 பக்க வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம்” என்று கோஹர் கூறியதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பிரிஐ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அண்மைய பொதுத் தேர்தலில் அதிக இடங்களை வென்றனர்.
இருப்பினும், பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. ஒதுக்கீட்டு ஆசனங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக அக்கட்சி மாறியது.

தேர்தல் ஆணைக்குழுவின் முடிவினால் தனது கட்சி அதன் சின்னமான ‘மட்டை’ தேர்தல் சின்னம் இல்லாமல் பொதுத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச அமைப்புகள், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களின் அறிக்கைகளின் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் கோஹர் வலியுறுத்தினார். மேலும், தேர்தலில் முறைகேடுகளை ஒழிக்க தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். (ANI)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT