Monday, May 20, 2024
Home » ‘1303’ எனும் உடனடி தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ள HNB பொதுக் காப்புறுதி

‘1303’ எனும் உடனடி தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ள HNB பொதுக் காப்புறுதி

by mahesh
May 8, 2024 9:00 am 0 comment

HNB பொதுக் காப்புறுதி (HNB General Insurance) அண்மையில் அதன் பிரத்தியேக உடனடி தொலைபேசி இலக்கமான ‘1303’ இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்காக அவர்களது சமீபத்திய முயற்சியை வெளிப்படுத்துகிறது. புதிய உடனடி தொலைபேசியான ‘1303’ ஆனது, நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் அதன் சேவையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்று, வாடிக்கையாளர்களின் வசதியையும் அணுகலையும் மேம்படுத்துகிறது.

HNB பொதுக் காப்புறுதி இலங்கை முழுவதும் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத சேவை மற்றும் பராமரிப்பை வழங்குவதில் நீண்ட காலமாக உறுதி பூண்டுள்ளது. உடனடி தொலைபேசி இலக்கமான ‘1303’ ஆனது, உடனடி உதவி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவை உறுதிப்படுத்துகின்றது.

வாடிக்கையாளர்கள் தற்போது ஒரு இலகுவான தொலைபேசி அழைப்பின் மூலம் நிபுணர் உதவியை அணுகலாம் என்பதோடு, நீண்ட காத்திருப்பு நேரங்கள் மற்றும் சிக்கலான செயன்முறைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். காப்புறுதி கோரிக்கையை தாக்கல் செய்யவும், காப்புறுதியைப் புதுப்பிக்கவும் அல்லது தகவல்களை அறியவும், ‘1303’ எனும் உடனடி தொலைபேசி இலக்கமானது, வாடிக்கையாளர்கள் தங்கள் விரல் நுனியில் உடனடியான மற்றும் நம்பகமான சேவையைப் பெறுவதை உறுதி செய்கிறது.

“வாடிக்கையாளர் வசதி மற்றும் அணுகல் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக ‘1303’ எனும் உடனடி தொலைபேசியை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்று HNB பொதுக் காப்புறுதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சித்துமின ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT