Sunday, May 19, 2024
Home » நிலையான நீர் முகாமைத்துவத்தின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்

நிலையான நீர் முகாமைத்துவத்தின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்

by mahesh
May 8, 2024 7:00 am 0 comment

இலங்கையின் வரலாற்றில், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய நாகரிகங்கள் நீர்ப்பாசன பொறியியல் முறைகளை உருவாக்கியுள்ளன. இன்று, 1,000 க்கும் மேற்பட்ட அருவிகள் மற்றும் 15,000 சிறிய குளங்களை உள்ளடக்கிய இந்த நீர்த்தேக்கங்கள், கிராமப்புற சமூகங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து, நவீன சவால்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதையும் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.

Acted and We Effect உட்பட முன்னணி INGOக்கள் மற்றும் NGO நிறுவனங்களின் கூட்டணி, The Coca-Cola Foundationஇன் ஆதரவுடன் இணைந்தது. மொனராகலை, அநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் உள்ள சமூகங்களை வலுவூட்டுவதற்கு இந்த கூட்டமைப்பு முயற்சி செய்கின்றது.

Coca-Cola அறக்கட்டளையின் நிதியுதவியுடன் We Effect, சமூகத்தை வலுவூட்டும் அதே வேளையில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரின் தரத்தை மேம்படுத்த தம்மென்னாவ கிராமத்தில் முயற்சிகளை மேற்கொண்டது. இதில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீர்த்தேக்கங்களை புத்துயிர் அளிப்பது, நீர் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் 200 ஏக்கரில் ஆண்டு முழுவதும் விவசாய செய்கை மேற்கொள்வதன் மூலம், 476 குடும்பங்கள் பயனடைகின்றன. 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கிராம விவசாயக் கூட்டுறவு சங்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டனர், 100 பேர் தொழில் முனைவோர் பயிற்சி பெற்றனர், இது நீர் இருப்பு, விவசாய உற்பத்தித்திறன் மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT