Monday, May 20, 2024
Home » கரப்பந்தாட்ட பயிற்சி மத்திய நிலையம்
நுவரெலியாவில்

கரப்பந்தாட்ட பயிற்சி மத்திய நிலையம்

by Gayan Abeykoon
May 9, 2024 4:18 pm 0 comment

மலையகத்தில் முதன்முறையாக கரப்பந்தாட்ட பயிற்சி மத்திய நிலையம் நுவரெலியாவின் உடபுஸல்லாவ டலோஸ் தோட்டத்தில்  நேற்று புதன்கிழமை  ஆரம்பித்து வைக்கப்பட்டது. மத்திய மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சிறந்த கரப்பந்தாட்ட வீரரான அமரர் நாகலிங்கம் கமலேஸ்வரனின் பெயரில் ‘கமலேஸ் கரப்பந்தாட்ட மத்திய பயிற்சி நிலையம்’ என இந்நிலையத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

கரப்பந்தாட்ட வீரர் அமரர் நா.கமலேஸின் புதல்வர் கமலேஸ்வரன் கணிஸ்நுவான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய கரப்பந்தாட்ட முன்னாள் தலைவர் எஸ்.சி.ஏக்கநாயக்க, வலப்பனை பிரதேச விளையாட்டுத்துறை அதிகாரி சாயா மதுவந்தி, நுவரெலியா மாவட்ட கரப்பந்தாட்ட வீரர்களின் மூத்த பயிற்றுவிப்பாளர் குலஸ்ரீ சமரசிங்க உள்ளிட்ட கலர் கலந்துகொண்டனர்.                 (ஆ.ரமேஸ்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT