Wednesday, May 1, 2024
Home » சவூதி அரேபியாவில் பின்பற்றப்படும் மனித உரிமைகள் செயற்பாடுகள்

சவூதி அரேபியாவில் பின்பற்றப்படும் மனித உரிமைகள் செயற்பாடுகள்

by mahesh
December 13, 2023 5:11 pm 0 comment

சவூதி அரேபிய அரசின் அடிப்படை நிர்வாக ஒழுங்கு என்பது, நீதி, ஆலோசனை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. அந்நாட்டு அரசு, இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படையில் மனித உரிமைகளை பாதுகாக்கிறது. இந்த அடிப்படையில், மனித உரிமைகளை மேம்படுத்தும், பாதுகாக்கும் சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை உருவாக்க சவூதி அரேபிய இராச்சியத்தின் அமைப்புகளும் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன.

சவூதி அரேபிய இராச்சியம் 2005 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் ஆணையத்தை நிறுவியது. இது பிரதமருடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு அரசாங்க அமைப்பாகும். இந்த ஆணையம் பொதுவாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அக்கறை கொண்டுள்ளது.

இராச்சியத்தில் மனித உரிமைகளின் மிக முக்கியமான துறைகளாக பின்வருவானவற்றைக் குறிப்பிடலாம்: பாதுகாப்பு, ஆரோக்கியம், தொழில், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சி, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பங்கேற்பை மேம்படுத்துதல், சிவில் சங்கங்களை உருவாக்குதல், ஆதரித்தல் அவ்வாறே பல்வேறு சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் இவற்றில் உள்ளடங்கும்.

சவூதி அரேபிய இராச்சியமானது, மனித உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படையான பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.

சவூதி அரேபிய இராச்சியமானது சிவில், பொது அல்லது தனியார் என அனைத்து மனித உரிமைத் துறைகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தனது குடிமக்கள், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அல்லது நாட்டிற்கு வருகை தருபவர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. மனித உரிமைகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பது தொடர்பான ஏராளமான சட்ட ஏற்பாடுகளை ஆளுகைக்கான அடிப்படைச் சட்டத்தில் சேர்ப்பதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய ‘விஷன் 2030’ இன் இலக்குகளின் பின்னணியில், கடந்த சில ஆண்டுகளில், பெண்களின் உரிமைகள் துறை உட்பட பல்வேறு துறைகளில் பரந்த மற்றும் தரமான சட்டச் சீர்திருத்தங்களை சவூதி அரேபிய இராச்சியம் கண்டுவருகிறது. அது பெண் உரிமை, அவர்களைப் பலப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு எதிரான பாகுபாடுகளை இல்லாதொழித்தல் போன்றவற்றுக்கு பங்களிப்புச் செயதுள்ளது. இதில் முக்கியமாக பின்வருவானவற்றைக் குறிப்பிடலாம்:

2016 ஆம் ஆண்டு தனியார் சட்டம் வெளியாகி, குடும்ப விவகாரங்களை கண்காணிக்கும் பணியை மேற்கொள்வதற்காக குடும்ப விவகார கவுன்சில் நிறுவப்பட்டது. 2018 ஆம் ஆண்டு, பெண் மாற்றுத்திறனாளிகள் உட்பட மாற்றுத்திறனாளிகளைக் கண்காணிப்பதோடு அவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஓர் உயர்சபை அமைக்கப்பட்டது. சிவில் நிலைச் சட்டம் மற்றும் குடிமை நிலைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டமை. இத்திருத்தமானது உரிமைகள், கடமைகள் மற்றும் சேவை நிபந்தனைகள் போன்றவற்றில் அனைவருக்கு மத்தியிலும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும் இது அனைத்து சவூதி குடிமக்களுக்கும் வேலை உரிமையை சமமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்ததோடு, பாலினம், இயலாமை, வயது அல்லது வேறு எந்த வகையான பாகுபாடுகளின் அடிப்படையில் அவர்களிடையே பாகுபாடு காட்டுவதை அனுமதிக்காத விதத்தில் அமையப்பெற்றிருந்தது.

அவ்வாறே, ஓய்வு பெறும் வயதுடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை அடையும் வகையில், சமூகக் காப்பீட்டு ஒழுங்கு திருத்தப்பட்டமை சவூதி சமூக விளையாட்டு கூட்டமைப்பு பெண்கள் மற்றும் பெண்கள் உட்பட சமூகத்தின் உறுப்பினர்களுக்கு விளையாட்டு நடவடிக்கைகளைப் பயிற்சி செய்வதற்கும், ஆண்களுடன் சமமான அடிப்படையில் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும் அதிகாரம் அளிக்கிறது. 2016 ஒலிம்பிக் போட்டிகளில் சவூதி பெண்களின் பங்கேற்பு இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.

காலித் ஹமூத் அல்கஹ்தானி 
இலங்கைக்கான
சவூதி அரேபியத் தூதுவர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT