Home » மலையக மக்கள் முன்னணியின் 35ஆவது ஆண்டு விழாவும், பேராளர் மாநாடும்

மலையக மக்கள் முன்னணியின் 35ஆவது ஆண்டு விழாவும், பேராளர் மாநாடும்

by sachintha
April 30, 2024 6:01 am 0 comment

ஹற்றனில் நடைபெற்ற நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்பு

மலையக மக்கள் முன்னணியின் 35 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் பேராளர் மாநாடும் நேற்றுமுன்தினம் (28.04.2023) ஹற்றன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் அமரர் சந்திரசேகரன் அரங்கில் கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கண்டி இந்திய உதவி தூதுவர் ​ெடாக்டர் எஸ்.ஆதிரா, கட்சியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன், பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் எல்.விஸ்வநாதன், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் தாழமுத்து சுதாகரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பேராளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் நினைவாக நினைவு முத்திரை ஒன்றும் தபால் திணைக்களத்தால் இதன்போது வெளியிடப்பட்டது. முதலாவது முத்திரையை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ. டி. சில்வா பெற்றுக் கொண்டார்.

இதன்போது கட்சியில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியவர்கள் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் நுவரெலியா மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், வளர்ந்துவரும் ஊடகவியலாளர்கள் என 37 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எஸ். தியாகு…

(நுவரெலியா நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT