Tuesday, May 21, 2024
Home » ரி20 உலகக் கிண்ணத்திற்கு அனுபவம் கொண்ட நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

ரி20 உலகக் கிண்ணத்திற்கு அனுபவம் கொண்ட நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

by sachintha
April 30, 2024 6:01 am 0 comment

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு கேன் வில்லியம்ஸன் தலைமையில் அனுபவம் கொண்ட நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டெஸ்ட் அணித் தலைவராக 35 வயது டிம் சௌதி தனது ஏழாவது ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கு அழைக்கப்பட்டிருப்பதோடு 35 வயதான ட்ரென்ட் போல்ட் தனது ஐந்தாவது ரி20 உலகக் கிண்ண தொடரில் விளையாடவுள்ளார்.

இதில் வேகப்பந்து வீச்சாளர் மட் ஹெட்ரி மற்றும் சகலதுறை வீரர் ரச்சின் ரவிந்திரா ஆகிய இருவரும் மாத்திரமே முன்னர் ரி20 உலகக் கிண்ண தொடரில் விளையாடாதவர்களாக உள்ளனர்.

ரி20 உலகக் கிண்ண அணியை அறிவிப்பதற்கான இறுதித் திகதி நாளையுடன் (1) நிறைவடையவுள்ள நிலையிலேயே முதல் அணியாக நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து குழாம்: கேன் வில்லியம்ஸன் (தலைவர்), பின் அலன், டிரென்ட் போல்ட், மைகல் பிரேஸ்வெல், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லொக்கி போர்கியுசன், மட் ஹென்ரி, டரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, மிட்சல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT