Home » மீகொட மகா வித்தியாலயம் பெயர் மாற்றம்

மீகொட மகா வித்தியாலயம் பெயர் மாற்றம்

by Gayan Abeykoon
May 1, 2024 2:40 am 0 comment

ஹோமாகமவின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் மறைந்த அரசியல்வாதியுமான காமனி ஜயசூரியவின் நூற்றாண்டு நினைவு தினத்தையிட்டு மீகொட மகா வித்தியாலயத்துக்கு “காமனி ஜயசூரிய வித்தியாலயம்” என பெயரிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. ஹோமாகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் பிரதேச அபிவிருத்திக் குழுவின் ஊடாக விடுக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமைய காமனி ஜயசூரிய வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பாடசாலையில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகள் மற்றும் பழைய மாணவர்களுக்கு  விசேட சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, ஹோமாகம வலயக் கல்விப் பணிப்பாளர்  ஹேமந்த கமகே, கல்லூரி அதிபர் எம். சி. திலகானந்தா மற்றும் ஆசிரியர்கள்,  ஊழியர்கள், உள்ளுர் பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT