Friday, May 10, 2024
Home » மின் வெட்டு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

மின் வெட்டு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

by Prashahini
August 14, 2023 12:49 pm 0 comment

மின்வெட்டு இன்றி மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (14) விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் மின்சார சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அவசியமானால், கேள்வி மனு (டெண்டர்) கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திட்டமிட்ட மின்வெட்டு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT