Saturday, June 1, 2024
Home » மாற்றுத்திறனாளி மாணவர்களை கல்வி செயற்பாடுகளில் உள்வாங்கல்

மாற்றுத்திறனாளி மாணவர்களை கல்வி செயற்பாடுகளில் உள்வாங்கல்

திருகோணமலையில் செயலமர்வு

by Gayan Abeykoon
May 10, 2024 1:06 am 0 comment

திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் உள்வாங்குவது தொடர்பாக கல்வியியலாளர்கள் கலந்துகொண்ட செயலமர்வு நேற்று வியாழக்கிழமை திருகோணமலை லக்கி பீச் ஹோட்டலில் நடைபெற்றது.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் கவுன்சிலின் ஒத்துழைப்புடன் இந்த செயலமர்வு நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களை உள்வாங்குதல் மற்றும் சிறந்த பயன் விளைவுகளை பெற்றுக்கொள்ளுதல் போன்றன தொடர்பான ஒரு சிறு ஆய்வு முயற்சியினை ஸ்ரீலங்கா நிறுவனம் இவ்வருடம் ஆரம்பத்தில் மேற்கொண்டது   இதற்கிணங்க திருகோணமலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான ஆய்வு முயற்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் இங்கு கலந்துரையாடலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது   செயலமர்வின் இறுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கல்வி முயற்சியில் உள்ளீர்க்கும் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

கிண்ணியா மத்திய நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT