Tuesday, April 30, 2024
Home » காத்தான்குடி சிறுவர் இல்லத்துக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு

காத்தான்குடி சிறுவர் இல்லத்துக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு

by mahesh
April 17, 2024 11:10 am 0 comment

காத்தான்குடி சிறுவர் இல்லத்துக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசுப் பொதிகள் அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைவாக பாதுகாப்பு பதவி நிலை ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயவின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு குருக்கள் மடம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் அமில டயஸ், சிறுவர் இல்ல மாணவர்களுக்கான இனிப்பு பண்டங்கள், பரிசுப் பொதிகள் என்பனவற்றை காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் ஐ.எல்.எம்.ருபைத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சிறுவர் இல்ல மாணவர்கள், அதன் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT