Tuesday, May 21, 2024
Home » திருநெல்வேலியில் மூன்று உணவகங்களுக்கு சீல்

திருநெல்வேலியில் மூன்று உணவகங்களுக்கு சீல்

- 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவீடு

by Prashahini
April 30, 2024 10:24 am 0 comment

– சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரை மூட உத்தரவு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.

பொது சுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனையின் போது , திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்துள்ளன. அது தொடர்பில் சுகாதார பரிசோதகரால் உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு , குறைகளை சீர் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

மறுபரிசோதனைக்காக நேற்று (29) குறித்த உணவகத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் சென்ற போது குறைகள் சீர் செய்யப்படாததை அடுத்து , மூன்று உணவக உரிமையாளர்களுக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களுக்கு 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவக சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகங்களுக்கு சீல் வைக்கமாறு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து மூன்று உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT