341
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றின்போது வீரர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேற்கு ஜாவாவில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தப் போட்டியின்போது 34 வயது வீரர் மீது மின்னல் தாக்கும் தருணம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மின்னல் தாக்கிய உடன் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்னரே உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் கடந்த 12 மாதங்களில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு 13 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டி ஒன்றிலும் இளம் வீரர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.