Home » கொவிட் தடுப்பு மருந்தை மீளப் பெற்றது அஸ்ட்ராசெனகா

கொவிட் தடுப்பு மருந்தை மீளப் பெற்றது அஸ்ட்ராசெனகா

by Gayan Abeykoon
May 9, 2024 6:18 am 0 comment

அஸ்ட்ராசெனகா நிறுவனம் அதன் வக்ஸ்செவ்ரியா கொவிட்–19     தடுப்புமருந்தை உலக அளவில் மீட்டுக்கொண்டுள்ளது.

அந்தத் தடுப்புமருந்து அரிதான, ஆபத்தான பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதை நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஒப்புக்கொண்டது. தடுப்புமருந்தை மீட்டுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை நிறுவனம் மார்ச் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பித்தது. அது நேற்று (08) நடப்பிற்கு வந்தது. அந்தத் தடுப்புமருந்து உற்பத்தி செய்யப்படவோ விநியோகிக்கப்படவோ இல்லை என்று நிறுவனம் குறிப்பிட்டது. வக்ஸ்செவ்ரியா தடுப்புமருந்தால் சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்று அண்மைய மாதங்களில் கூறப்பட்டது. இரத்தம் கட்டிக்கொள்ளக்கூடும், இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று கூறப்பட்டது.

ஆனால் வர்த்தகக் காரணத்திற்காகவே தடுப்புமருந்தை மீட்டுக்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT