Monday, May 20, 2024
Home » பெண்ணின் மூக்கில் இருந்து அகற்றப்பட்ட 100இற்கும் மேற்பட்ட புழுக்கள்

பெண்ணின் மூக்கில் இருந்து அகற்றப்பட்ட 100இற்கும் மேற்பட்ட புழுக்கள்

by Prashahini
May 8, 2024 4:19 pm 0 comment

தாய்லாந்தை சேர்ந்த 59 வயது பெண்ணின் மூக்கில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததை வைத்தியர்கள் கண்டறிந்து அகற்றியுள்ளனர்.

தாய்லாந்து வடக்கு பகுதிசை சேர்ந்த பெண், கடந்த ஒரு வாரமாக மூக்கு அடைப்பு மற்றும் முக வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். பிறகு, பெண்ணின் மூக்கில் இருந்து திடீரென இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணை தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள நகோர்ன்பிங் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, அந்த பெண்ணுக்கு X – Ray உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. X – Ray வை பரிசோதித்த வைத்தியர் பட்டீமோன் தனச்சாய்கான், பெண்ணின் மூக்கில் அசாதாரணமான ஒன்று இருப்பதை கண்டார்.

இதையடுத்து, பெண்ணிற்கு எண்டோஸ்கோப்பிக் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, பெண்ணிற்கு சிகிச்சையின் மூலம் மூக்கின் உள்ளே இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்களை வைத்தியர்கள் அகற்றினர்.

சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், கண்கள் அல்லது மூளை போன்ற அருகிலுள்ள உறுப்புகளுக்கு புழுக்கள் இடம்பெயர்ந்திருக்கக்கூடும்.அது இன்னும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி, மரணத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக சியாங் மாய் பகுதியில், ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அது, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT