Saturday, April 27, 2024
Home » ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்தவெளி சிலுவைப்பாதை

ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்தவெளி சிலுவைப்பாதை

by damith
February 13, 2024 11:05 am 0 comment

கொழும்பு புனித ஜோசப் வாஸ் மன்றம் வருடாந்தம் நடத்தும் தவக்கால திறந்த வெளி பெரிய சிலுவைப் பாதை இம்முறையும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கொழும்பு உயர்மறை மாவட்ட துணை ஆயர் பேரருட்திரு பி. அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 3 .15 மணிக்கு திறந்தவெளி பெரிய சிலுவைப் பாதை நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு புதுச்செட்டித் தெரு புனித வியாகுலமாதா ஆலயத்திலிருந்து சிலுவைப் பாதை பவனி ஆரம்பமாகவுள்ளது. சிலுவைப்பாதை பவனி கொழும்பு ஜெம்பட்டா வீதி, கண்ணாரத் தெரு, ஜிந்துப்பிட்டி மற்றும் விவேகானந்தர் மேடு வழியாக கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தை சென்றடையவுள்ளது.

சிலுவைப் பாதையில் 14 திருநிலைகள் தியானிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பேராலய முன்றலில் சிறப்புத் திருப்பலி யுடன் இந்த பெரிய சிலுவைப் பாதை நிகழ்வுகள் நிறைவடையவுள்ளன. சிலுவைப்பாதை தியானத்தின் போது அருளுரைகளை மன்றத்தின் ஸ்தாபகர் ஆனந்தன் பெர்னாண்டோ புள்ளே அடிகளாரின் தலைமையில்அருட் பணியாளர்கள் பலரும் வழங்குவர்.

இறுதி சிறப்புத் திருப்பலி பூசை துணை ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும்.

-எல்.எஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT