Home » சகல தரப்பும் ஒன்றிணைந்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்

சகல தரப்பும் ஒன்றிணைந்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு

இதுவரை 11 நாட்கள் விவாதம், 150 மில்லியன் ரூபா செலவு

by gayan
April 27, 2024 9:13 am 0 comment

“நாம் ஒன்றிணைந்து இவ்விடயத்துக்கு தீர்வு காண முன்வரா விட்டால் இன்னும் விவாதங்களை தொடரலாம்”

சபையில் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்துக்கு தீர்வு காண்பதானால் பேராயர் மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவை உள்ளிட்ட அவர்களின் சட்டத்தரணிகள், எதிர்க்கட்சியினர், பொலிஸார் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து விசாரணைகளை மேற்கொண்டு சரியான தகவல்களை பெற்றுக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் பொலிஸ் தரப்பிலும் குறைபாடுகள்

லோரன்ஸ் செல்வநாயகம்

காணப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வதாக சபையில் குறிப்பிட்ட அவர், அவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 11 நாட்கள் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அதற்காக 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நாம் ஒன்றிணைந்து இவ்விடயத்திற்கு தீர்வு காண முன்வராவிட்டால் இன்னும் விவாதங்களை தொடர வேண்டிய நிலையே ஏற்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியாது. அவ்வாறு செயற்படுத்தினால் பலரை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று குறிப்பிட்டதாக பேராயர் தெரிவித்ததை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்துள்ள போதும், பேராயர் ஏன் தற்போது இதனை குறிப்பிட வேண்டும்? அவர் கோட்டாபய ராஜபக்ச கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தாரா? என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்கள் மாத்திரமே மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன.

நான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பேராயருடனும் கத்தோலிக்க திருச்சபையுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டேன். அவர்களிடம் ஏதேனும் தகவல்கள் இருக்குமானால் அவற்றை வழங்குமாறும் கோரினேன். ஆனால் பேராயரிடமிருந்தோ கத்தோலிக்க திருச்சபையின் தரப்பில் இருந்தோ சாதகமான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிக்கைகள் கிடைக்கவில்லை என்று கத்தோலிக்க திருச்சபையினர் குற்றம் சாட்டினார்கள். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முழுமையான அறிக்கையை ஒப்படைத்தேன். அறிக்கையின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களிடம் நான் குறிப்பிட்டேன்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக பரிசீலனை செய்த கத்தோலிக்க திருச்சபையினர் கடந்த வாரம் எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் குறித்து அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். குண்டுத்தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் பொலிஸ் தரப்பிலும் குறைபாடுகள் காணப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கிறேன். இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளேன்.

பேராயர் வெளியில் குறிப்பிடும் விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பேசுகின்றார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 11 நாட்கள் விவாதம் இதுவரை நடைபெற்றுள்ளது. இதற்காக 150 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்றிணைந்து இவ்விடயத்திற்கு தீர்வு காண முன்வராவிட்டால் இன்னும் விவாதங்களை தொடர வேண்டியே வரும் .

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT