Monday, May 20, 2024
Home » T20 மகளிர் உலக கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி

T20 மகளிர் உலக கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி

by Prashahini
May 8, 2024 10:42 am 0 comment

ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி காண் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

உதேஷிகா பிரபோதனி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT