Monday, May 20, 2024
Home » இருதய நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

இருதய நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

by mahesh
May 8, 2024 10:50 am 0 comment

பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மரண பரிசோதனைகளில் இருதய நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் பத்மேன்திர விஜயதிலக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த மூன்று மாதங்களில் 30–50 வயதுகளையுடையவர்களில் 70% வீதமானோர் இருதய நோயினால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இளம் மற்றும் நடுத்தர வயதுகளையுடையவர்கள் இருதய நோயால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

30 வயதுக்கு மேற்பட்ட நபரொருவர் திடீரென வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் எரிச்சல், மயக்கம் போன்ற நோய்அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியரொருவரை சந்தித்து குருதி மற்றும் ஈ.சி.ஜி பரிசோதனையை மேற்கொள்ளுமாறு திடீர் மரண பரிசோதகர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

(பலாங்கொடை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT