Wednesday, May 8, 2024
Home » ஓட்டமின்றி 7 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை

ஓட்டமின்றி 7 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை

by gayan
April 27, 2024 9:16 am 0 comment

இந்தோனேசிய சுழற்பந்து வீராங்கனை ரொஹ்மாலியா, மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் ஓட்டம் இன்றி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.

பாலியில் கடந்த புதன்கிழமை (24) நடைபெற்ற மங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் 17 வயதான ரொஹ்மாலியா 3.2 ஓவர்களில் ஒரு ஓட்டத்தைக் கூட விட்டுக்கொடுக்காது 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் ஆறு வீராங்கனைகளை டக் அவுட் செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தோனேசிய அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்ற நிலையில் மங்கோலிய அணி 24 ஓட்டங்களுக்கே சுருண்டது.

முன்னதாக 2021 இல் பிரான்ஸுக்கு எதிராக நெதர்லாந்து வேகப்பந்து வீராங்கனை பெடரிக் ஓவர்டிக் 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT