Home » மைத்திரிபாலவுக்கு மற்றுமொரு இடைக்கால தடையுத்தரவு

மைத்திரிபாலவுக்கு மற்றுமொரு இடைக்கால தடையுத்தரவு

- ஶ்ரீ.சு.கட்சியின் தலைவராக செயற்படுவது குறித்து விசாரணை

by Prashahini
April 24, 2024 2:37 pm 0 comment

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) மற்றுமொரு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டேகு சரத்சந்திர சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த விசாரணை முடியும் வரை இந்த இடைக்காலத் தடை அமுலில் இருக்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத்சந்திரவினால் 2022ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கட்சியின் செயற்குழு அமைக்கப்பட்ட விதத்தை மனுதாரர் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக மாவட்ட நீதிபதி இதன்போது அறிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கியதைத் தொடர்ந்து, அவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியாக தெரிவானதோடு, ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெற்றதைத் தொடர்ந்து கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன கட்சியின் செயற்குழுவிற்குள் உள்வாங்கப்பட்டு, தலைவராக செயற்பட்டமை தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இரண்டாவது உத்தரவு இதுவாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் மாவட்ட நீதிமன்றம் ஏற்களவே உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும்

சு.க.வின் பதில் தலைவராக விஜயதாச; மைத்திரி தரப்பினர் ஏகமனதாக தீர்மானம்

மைத்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்து 02 பூட்டுகள்

மைத்திரி கட்சியையும் நாட்டையும் அழித்து விட்டார்

SLFPயில் இருந்து மூவரை நீக்கும் தீர்மானத்துக்கு தடை நீடிப்பு

SLFP இன் புதிய பதில் தலைவராக நிமல் சிறிபால நியமனம்

SLFP தலைவராக மைத்திரி செயற்பட நீதிமன்றம் தடை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT