Home » இலங்கையின் பாற்சோறுக்கு உலகளாவிய புகழ் (VIDEO)

இலங்கையின் பாற்சோறுக்கு உலகளாவிய புகழ் (VIDEO)

- சர்வதேச அரங்கில் பாராட்டை பெற்ற சாவிந்திரி பெரேரா

by Prashahini
April 24, 2024 3:01 pm 0 comment

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான ‘MasterChef Australia’ இல் இலங்கையின் பாரம்பரிய உணவான ‘பாற்சோறை ‘ சமைத்து பாராட்டு சென்றுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய காலை உணவின் விளக்கக்காட்சி மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டதோடு, நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறினார்.

‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும் சாவிந்திரி பெரேரா, பால்சோறு மற்றும் இலங்கை கருப்பட்டி சேர்க்கப்பட்ட தேங்காய் துருவல் ஆகியவற்றை வழங்கினார்.

அவரது உணவை ‘ஒரு கொண்டாட்டத்திற்கு’ ஒப்பிட்ட நடுவர்கள், நல்லதொரு சிறப்பான இலங்கை உணவை வழங்கியதற்காக அவரை பாராட்டினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT