Sunday, May 19, 2024
Home » போலி வைத்தியர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

போலி வைத்தியர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

கைதானால் கடும் தண்டனை

by damith
May 6, 2024 7:45 am 0 comment

போலிச் சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை, கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் (04) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே இதுபற்றி தீர்மானிக்கப்பட்டது. வைத்திய துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. வைத்தியர்களின் வாகனங்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள், போலிச்சான்றிதழ்கள், தரமற்ற மருந்துகளை விற்பனை செய்தல் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை என்பன பற்றி பிரதானமாக இங்கு பேசப்பட்டது. இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போலி வைத்தியர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.இவ்வாறான போலி வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT