Sunday, May 19, 2024
Home » ஆப்கான் ஏ அணிக்கு வெற்றி

ஆப்கான் ஏ அணிக்கு வெற்றி

by damith
May 6, 2024 10:39 am 0 comment

இலங்கை ஏ அணிக்கு எதிரான நான்காவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆப்கான் ஏ அணி கடைசி ஓவர் வரை போராடி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (05) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரரான அணித் தலைவர் நிஷான் மதுஷ்க 115 ஓட்டங்களை பெற்றதோடு சொனால் தினூஷ 78 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய ஆப்கான் அணிக்கு ஆரம்ப வீரர் ரியாஸ் ஹசன் 106 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அந்த அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 276 ஓட்டங்களை எட்டியது.

எனினும் இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வென்று இலங்கை ஏ தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT