Tuesday, April 30, 2024
Home » ஆப்பிரிக்க திட்டங்களில் இருந்து சீன ஈட்டும் வருவாயில் வீழ்ச்சி

ஆப்பிரிக்க திட்டங்களில் இருந்து சீன ஈட்டும் வருவாயில் வீழ்ச்சி

by Rizwan Segu Mohideen
April 17, 2024 8:59 pm 0 comment

கடன் வழங்குநர்கள் தங்கள் பணப்பையை இறுக்கிக் கொண்டிருப்பதாலும், திட்டங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், ஆபிரிக்காவில் பொறியியல் மற்றும் கட்டுமானப் பணிகளில் இருந்து சீனா ஈட்டி வரும் வருவாய் 2015 முதல் 30 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உயர் சர்வதேச ஆய்வுப் பிரிவின் சீனா ஆபிரிக்கா ஆராய்ச்சி முன்முயற்சியின் (CARI) தரவுகளின்படி, ஆபிரிக்காவில் பொறியியல் மற்றும் கட்டுமான ஒப்பந்தங்கள் 2022 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களுக்கு 37.84 பில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்த ஆண்டு வருவாயை ஈட்டியது.இது அமெரிக்காவை விட 31 சதவீதம் வீழ்ச்சியாகும். 2015 ஆம் ஆண்டில் 54.78 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களுக்கான உலகளாவிய வருவாயில் 19.4 சதவீதம் ஆபிரிக்க நாடுகளில் இருந்து பெறப்பட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது.

சிறு வணிகங்களைத் தவிர்த்து, ஆபிரிக்காவில் தற்போது 10,000-க்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் சீன நிறுவனங்கள் செயல்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களைத் தேடி வர்த்தக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
2000 மற்றும் 2022 க்கு இடையில், ஆப்பிரிக்க நாடுகளில் துறைமுகங்கள், நீர்மின் அணைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்கள் உள்ளிட்ட 170.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களை முன்னெடுக்க சீனா உறுதியளித்திருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தத் இலக்கு பாதிக்கப்பட்டது.
சில நாடுகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் தொடர்பான கவலைகள் ஆப்பிரிக்காவிற்கு சீனக் கடன் வழங்குவதில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

2012 மற்றும் 2018 க்கு இடையில், சீனா கடன் வழங்குபவர்களிடமிருந்து ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் ஆப்பிரிக்க நாடுகள் கடன் பெற்றன.

2021 ஆம் ஆண்டில் இந்தத் தொகை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது. மேலும் 2022 ஆம் ஆண்டில் இது 994.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

“ஆப்பிரிக்காவில் ஒப்பந்த வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு, ஆப்பிரிக்காவுக்கான சீனக் கடன்களின் வீழ்ச்சி காரணமாக இருக்கலாம்” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஜனநாயக ஆளுமை மற்றும் புத்தாக்க மையத்தைச் சேர்ந்த ஹாங் ஜாங் தெரிவித்தார். 2013 இல் இருந்து ஆப்பிரிக்காவுக்கான சீனக் கடன்கள் குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.இதற்கிடையில், ஆசியாவின் பங்கு அதிகரித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொறியியல் மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் 82.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டின.

எண்ணெய் வளம் மிக்க நாடான அல்ஜீரியாவில் எரிபொருள் சேமிப்பு குதங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன . சீன நிறுவனங்கள் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஆப்பிரிக்காவில் வருமானம் ஈட்டி வருகின்றன.

இருப்பினும், ஆப்பிரிக்காவில் இருந்து வருவாய் வீழ்ச்சியடைந்தாலும், ஆபிரிக்கக் கண்டத்தின் சில பகுதிகள் ஏனைய நாடுகளை விட அதிக வருவாய் ஈட்டுகின்றன.

நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, எகிப்து மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய ஐந்து வளங்கள் நிறைந்த நாடுகளிலிருந்து சீனாவின் மிக அதிக வருவாய் ஈட்டி வருகிறது.

2022 ஆம் ஆண்டின் சீன நிறுவனங்கள் மொத்த ஆண்டு வருமானத்தில் 41 சதவீதத்தை ஆப்பிரிக்காவில் கட்டுமானத் திட்டங்களிலிருந்து பெற்றுள்ளன.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில், சீன வணிகங்கள் பல பில்லியன் டொலர் ரயில்வே மற்றும் துறைமுகங்கள் போன்ற பாரிய திட்டங்களை மேற்கொள்கின்றன. நைஜீரியாவில் இருந்து சீனாவின் வருடாந்த வருவாய் 2004 இல் 488 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2012 இல் 4.99 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT