Friday, May 17, 2024
Home » பலஸ்தீன – இஸ்ரேல் ஆதரவாளர்கள் மோதல்
பல்கலை ஆர்ப்பாட்டம்:

பலஸ்தீன – இஸ்ரேல் ஆதரவாளர்கள் மோதல்

by sachintha
April 30, 2024 8:07 am 0 comment

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் மேலும் பலர் கைது செய்யப்பட்டிருப்பதோடு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.

கலிபோர்னிய பல்கலையில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்ட முகாமின் அளவு விரிவடைந்திருக்கும் நிலையில் அங்கு பதில் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இரு ஆர்ப்பாட்டக்காரர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்ட நிலையில் பரஸ்பரம் கோசங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதோடு சில சந்தர்ப்பங்களில் கைகலப்பும் ஏற்பட்டன. இவர்களை பொலிஸார் விலக்கியுள்ளனர். காசாவில் போர் நிறுத்தத்தை கோரியும், இஸ்ரேலுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கவும் கோரியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

10 நாட்களுக்கு மேல் தொடரும் போராட்டங்களில் குறைந்தது 800 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT