Home » இவ்வார புனிதர் புனித கத்ரீன்

இவ்வார புனிதர் புனித கத்ரீன்

by sachintha
April 30, 2024 8:13 am 0 comment

சியன்னா நகர புனித கத்ரீன் ஒரு தொமினிக்கன் சபையின் உறுப்பினரும் இறையியலாளரும் மெய்யியலாளரும் ஆவார்.

இவர் அவிஞ்ஞோன் நகரில் தங்கியிருந்த திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி உரோமை நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970-இல் இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார்.

அசிசியின் புனித பிரான்சிசோடு இவரும் இத்தாலியின் பாதுகாவலராக கருதப்படுகின்றார்.

இவரின் இயற்பெயர் கத்ரோனா பெனின்கசா. இவர் இத்தாலியில் உள்ள சியன்னா என்னும் ஊரில், கியாகோமோ டி பெனின்கசாவுக்கும், லாப்பா பியகென்டியுக்கும் பிறந்தவர்.

கத்ரீனுக்கு ஐந்து அல்லது ஆறு அகவையின் போது முதல் காட்சி கிடைத்தது. அதில் இயேசு தன்னை ஆசிர்வதித்தார் எனவும், தன்னைப் பார்த்து சிரித்தார் எனவும். இக்காட்சியின் முடிவில் பரவச நிலையை அடைந்தார் எனவும் கூறியுள்ளார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாட்டை அளித்தார்.

இவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், மூத்த சகோதரியின் கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரைகட்டாயப்படுத்தினர்.

இதனால் தன் பெற்றோர் மனம் மாறும் வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார்.

புனித தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.

கத்ரீன் தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT