Tuesday, April 30, 2024
Home » யார் மாறினாலும் மாறாத திட்டத்தைத் தயாரித்துள்ளோம்

யார் மாறினாலும் மாறாத திட்டத்தைத் தயாரித்துள்ளோம்

- உழைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதே நிஜமான போராட்டம்

by Rizwan Segu Mohideen
April 17, 2024 7:22 pm 0 comment

– மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்

மக்கள் வீதிக்கு இறங்கி மாற்றத்தை ஏற்படுத்தும்படி கூச்சலிட்டனர். ஓர் அமைச்சாக கொள்கை முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கடந்த இரண்டு வருடங்களில் தேவையான கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான விசேட நிகழ்வில் இன்று (17) கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் தொழிற் துறையில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடிந்துள்ளது. கடந்த வருட இறுதியில் அந்த மாற்றங்களுக்கு அடித்தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

சுமார் இரண்டு வருடங்களாக மக்கள் தெருக்களில் இறங்கி கூச்சலிட்டனர். இந்த முறைமையை மாற்றக் கோரினர். ஆனால் ஒட்டுமொத்த மக்களும் இந்த முறைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நினைத்தனர். ஆனால் மக்கள் அங்கு மனமாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

அதனால் தான் எங்களுக்கு தேசிய கொள்கைகள் தேவைப்பட்டன. யார் மாறினாலும் மாறாத திட்டத்தைத் தயாரிக்க விரும்பினோம். கடந்த இரண்டு வருடங்களில் எமது அமைச்சு அந்த வேலைத்திட்டத்தை சரியாகச் செய்துள்ளது.

நாங்கள் குடியகல்வு கொள்கையை உருவாக்கினோம். மேலும், தொழிலாளர் கொள்கை குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதற்கு தொடர்புடைய கொள்கையையும் அறிமுகப்படுத்தி. தொழிலாளர் சட்டத்தையும் மாற்றினோம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மாற்றி கொள்கை மாற்றத்தை உருவாக்கவும் முடிந்தது.
அவ்வாறே எங்களால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தையும் தொழிலாளர் துறையையும் டிஜிட்டல் மயமாக்க முடிந்ததுள்ளது . வெள்ளையர்களின் காலத்தில் நினைத்துக்கூட பார்க்காத ஒவ்வொரு தொழிலாளிக்கும் கௌரவத்தை வழங்கும் கருசரு திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்

எம்மால் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய மிக அடிப்படையான கொள்கை மாற்றத்தை உருவாக்க முடிந்தது. இதற்கு அமைச்சில் உள்ள அனைவரும் உறுதியாக இருந்தனர். இதுதான் உண்மையான போராட்டம். அதாவது அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

உழைத்து நாட்டைக் கட்டியெழுப்புவது உண்மையான போராட்டம். பல வருடங்களாக செய்ய முடியாத காரியங்களை இந்த இரண்டு வருடங்களில் செய்து முடித்துள்ளோம்” என தெரிவித்தார் .

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT