Friday, May 17, 2024
Home » காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

by sachintha
April 30, 2024 2:16 pm 0 comment

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்று அண்மையில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப வைபவம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மெளலவி ஹாரூன் ரசாதி தலைமையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சமூக சேவை பிரிவின் தலைவர் மௌலவி அனீஸின் ஒழுங்கமைப்புடன் நடைபெற்ற இரத்த தான நிகழ்வின் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய அதிகாரி டொக்டர் அலிமா அப்துர் ரஹ்மான் உட்பட உலமாக்கள் வைத்தியசாலை தாதியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT