Thursday, May 9, 2024
Home » உலக கண் பரிசோதனை வாரத்தில் முதற்கட்ட கண் பரிசோதனை தொகுதியை வழங்கிய விஷன் கெயார்

உலக கண் பரிசோதனை வாரத்தில் முதற்கட்ட கண் பரிசோதனை தொகுதியை வழங்கிய விஷன் கெயார்

by Rizwan Segu Mohideen
March 28, 2024 1:28 pm 0 comment

உலக கண் பரிசோதனை வாரத்தை முன்னிட்டு விஷன் கெயார் நிறுவனம் “விசன் கொயர் கண் பரிசோதனை மற்றும் அறிவூட்டல் உபகரணத் தொகுதியை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயற்பாடானது பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை அமைப்புகள் மத்தியில் கண் சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வு கொழும்பு 02, விஷன் கொயர் நிறுவனத்தில் நடைபெற்றதுடன் ஆரம்ப நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கென வடிவமைக்கப்பட்ட “விஷன் கெயார் அறிவூட்டல் கட்டளைத் தொகுதி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த உபகரணத் தொகுதியில் முழுமையான கண் பரிசோதனைக் கருவிகள், அறிவூட்டல் சாதனங்கள் மற்றும் பாடசாலை மட்டத்தில் செயற்திறன் மிக்க கண் சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உட்பட அத்தியாவசியமான அகங்களைக் கொண்ட விசேட கட்டளைத் தொகுதி வழங்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த இலங்கை கண் மருத்துவர்கள் கல்லூரியின் தலைவர் டாக்டர் அமில டி அல்விஸ், இந்த சுகாதார தேவை அதிகரிப்பதால் கண்பார்வை சோதனைக் கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சி என்பவற்றிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும். கண் பரிசோதனை நிபுணர்களுக்கு தேவையான திறன்கள் மற்றும் அறிவினை வழங்கி வலுவூட்டுவதன் மூலம் அவசியமானவருக்கு தீர்வினை வழங்குவதை உறுதி செய்ய முடியுமென தெரிவித்தார்.

கண் அழுத்த நோய் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளின் போது கண் பரிசோதனைகளை மேற்கொள்வது முன்கூட்டியே நோயறிந்து உரிய நேரத்திலான சிகிச்சை பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய விஷன் கெயார் நிறுவனத்தின் பொது முகாமையாளர், நல்வாழ்வுக்கு கண் நலன் அடிப்படையானது. இந்த திட்டம் ஊடாக சமூகங்களுக்கு வலுவூட்ட நாம் முயற்சிப்பதோடு அதனை இளைய தலைமுறையுடன் ஆரம்பிப்பதற்கு முயற்சிப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT