Saturday, April 27, 2024
Home » மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்க ஒப்பந்தம் கைச்சாத்து

மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்க ஒப்பந்தம் கைச்சாத்து

by mahesh
March 27, 2024 11:00 am 0 comment

உயர்கல்வித்துறையைப் புரட்சி செய்து இலங்கையில் மூளைசாலிகள் வெளியேற்றம் (brain drain) தொடர்பான பிரச்சினையை நிவர்த்தி செய்யும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு டிரைன்கேட்(Trainocate) நிறுவனமும் BCAS நிறுவனமும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், மைக்ரோசாப்ட் அடிப்படை திட்டங்களை (Microsoft Fundamental Programs) பல்கலைக்கழக கற்பித்தல் திட்டத்தில் இணைப்பதிலும் கவனம் செலுத்தும் இந்தக் கூட்டு செயற்பாடு, கல்வித்துறைக்கும், தொழிற்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகளாவிய பல்வேறு விற்பனையாளர் திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களில், தொழில் துறை தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் தேவையை Trainocate நிறுவனம் உணர்ந்துள்ளது. BCAS நிறுவனத்துடன் இணைந்து, மைக்ரோசாப்ட் அடிப்படை திட்டங்களை கற்பித்தல் திட்டத்தில் இணைப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளன. கற்றல் முறையை மறுவடிவமைப்பதற்கும், தொழிற்துறையின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தை முன்னிட்டு, 2024 மார்ச் 14 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்று நடந்தது. இதில், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட புதுமையான திட்டங்கள், குறிப்பாக மைக்ரோசாப்ட் அடிப்படை திட்டங்கள் கற்பித்தல் திட்டத்தில் இணைக்கப்படுவது ஆகியவை அறிவிக்கப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT