Monday, May 6, 2024
Home » இலங்கையின் முதலாவது புத்தாக்கமான பசுமை வரைபடம்

இலங்கையின் முதலாவது புத்தாக்கமான பசுமை வரைபடம்

by Gayan Abeykoon
April 24, 2024 4:56 am 0 comment

“நாம் முன்னெடுக்கும் பாதைகள்” EUNIC இலங்கை மற்றும் Good Life X இணைந்து முன்னெடுக்கும் திட்டமாகும்.  EUNIC – ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் – ஐரோப்பிய ஒன்றியத்தின் 36 அங்கத்துவ நாடுகளின் தேசிய கலாசார நிறுவனங்களை உள்ளடக்கிய ஒன்றியமாகும். EUNIC இலங்கை – இலங்கையிலுள்ள Alliance Française மற்றும் பிரான்ஸ் தூதரகம் மற்றும் மாலத்தீவுகள், கோயித் நிறுவனம், பிரிட்டிஷ் கவுன்சில். சுவிஸ் தூதரகம், நெதர்லாந்து ராஜ்ஜிய தூதரகம், இத்தாலியின் தூதரகம் மற்றும் EUவின் அனுசரணையுடன் கலாசார உறவுகள் மற்றும் படைப்பாற்றல் மற்றும் வெவ்வேறுபட்ட மக்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையாளுகின்றனர்.

Good Life X, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் (EUNIC),   – இலங்கையின் முதன்முறையாக படைப்பாற்றல் மிக்க கலைஞர்களை – தனிநபர்கள், நிறுவனங்கள், அல்லது வியாபாரங்கள் பற்றிய தகவல்களை திரட்டி ஆவணப்படுத்தி டிஜிட்டல் மற்றும் அச்சிடப்பட்ட வரைபடத்தில் குறிப்பிடப்படுவார்கள்.

இக் கலைஞர்களை அவர்களின் பணிமுறைகள் மற்றும் நீடிப்புத்திறன், சுழற்சி முறை, சகவாழ்வு முறைகள் மூலம் மக்களும் பூமியுடன் தொடர்புட்ட தலைப்புகளாக இருக்க வேண்டும். “நாம் முன்னெடுக்கும் பாதைகள்” எனும் திட்டமானது பெருகிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் படைப்பாளிகளின் பங்கை தீர்வாக முன்வைக்கும் திட்டமாகும்.

இத்திட்டம் கொழும்பில்  வார இறுதியில் முன்னெடுக்கும் கண்காட்சியில், படைப்பாளிகள் அவர்களின் திறமை, நோக்கம் மற்றும் கைத்திறன்களை வருகையாளரான தொழில்வல்லுநர்கள், மாணவர்கள், படைப்பாற்றல் துறையின் முன்னோடிகள், உடனுழைப்பார்கள், தொடர்புபட்ட தனியார் மற்றும் பொது பங்குதாரர்கள் மற்றும் ஊடகத்தின் முன்னால் காட்சிப்படுத்தும் வாய்ப்பினை பெறுவார்கள். இது திட்டமானது மார்ச் முதல் ஜூலை 2024 வரை இடம்பெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT