Saturday, May 18, 2024
Home » “சாத்தியமான எதிர்காலம்”: இலங்கையில் DJI இன் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகளை வெளியிடும் தக்ரால்

“சாத்தியமான எதிர்காலம்”: இலங்கையில் DJI இன் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகளை வெளியிடும் தக்ரால்

by Rizwan Segu Mohideen
May 4, 2024 11:19 am 0 comment

இலங்கையில் DJI இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான தக்ரால் குழுமம், “சாத்தியத்தின் எதிர்காலம்” நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது. இந்த பிரத்தியேக நிகழ்வானது, நாட்டின் புத்தாக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான இடைவிடாத முயற்சிக்கு ஒரு சான்றாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்வானது, DJI இன் சமீபத்திய வெளியீடுகள், நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்கள், நிறுவனங்களுக்கான தீர்வுகள், விவசாய தொழில்நுட்பம் மற்றும் விநியோக முறைகள் ஆகிய விடயங்களில் ஒரு ஆழமான அனுபவத்தை வழங்கியது. உயர்-செயற்றிறன் கொண்ட ட்ரோன்கள் முதல் பல்வேறு தொழில்துறைகளுக்கு ஏற்றவாறான பிரத்தியேக தீர்வுகள் வரை, DJI யின் அதிநவீன சலுகைகளை அறிந்த அனைவருக்கும் இது மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.

சிவிலியன் ட்ரோன்கள் மற்றும் ஏரியல் இமேஜிங் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான DJI, தொழில்துறைகளில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும், அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஏற்றவாறு அதன் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வெளியிட்டுள்ளது. 

இந்நிகழ்வில் DJI நிபுணர்கள் தங்களது தயாரிப்புகளின் நடைமுறை பயன்பாடுகளை தெளிவுபடுத்தியதோடு, தொழில்முறை மற்றும் அன்றாட சந்தர்ப்பங்களில் இந்த தொழில்நுட்பங்களை எவ்வாறு தடையின்றி ஒருங்கிணைக்க முடியும் என்பதையும் விளக்கினர்.

இந்நிகழ்வு, பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், அரசாங்க அமைப்புகளின் முக்கிய அதிகாரிகள், நாடு முழுவதிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களும் DJI இன் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் பரந்த திறனை ஆராய்வதற்கு வாய்ப்பாக அமைந்தது.

தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்நிகழ்வில் ஒன்றிணைந்ததன் மூலம், சிறந்த தொடர்பாடல் வாய்ப்புகள் ஏற்பட்டன. இது இலங்கை முழுவதும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உறுதியளிக்கும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான அடித்தளத்தை அமைத்தது.

இலங்கை சமூகத்தின் பல்வேறு துறைகளில் DJI இன் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதங்களை “சாத்தியமான எதிர்காலம்” நிகழ்வு தூண்டியதோடு, இது பற்றிய கலந்துரையாடலுக்கான ஒரு தளமாகவும் செயற்பட்டது.

நிகழ்வின் இறுதியில், பங்கேற்பாளர்கள் DJI இன் முன்னோடியான தொழில்நுட்பங்கள் மற்றும் இலங்கையின் பல்வேறு தொழில்துறைகளை மாற்றியமைக்கும் அவற்றின் தாக்கம் ஆகியன தொடர்பில் பாராட்டுகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு நாட்டின் தொழில்நுட்பப் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிப்பதோடு, சாத்தியங்கள் நிறைந்த எதிர்காலத்தின் தீர்க்கதரிசனத்தை எடுத்துக் காட்டியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT