Saturday, May 18, 2024
Home » தங்கத்தின் விலையில் நேற்று திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் நேற்று திடீர் மாற்றம்

22 கரட் தங்க பவுண் ரூ. 177,050

by mahesh
May 4, 2024 11:00 am 0 comment

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகியது. நேற்றும் (03) சடுதியாக இதன் விலை குறைவடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 684,150 ரூபாவாக பதிவாகியது. 24 கரட் தங்கம் கிராம் (24 karat gold 1 grams) 24,140 ரூபாவாக பதிவாகியது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 193,100 ரூபாவாக பதிவாகியது. அதேபோல 22 கரட் தங்கம் கிராம் (22 karat gold 1 grams) 22,130 ரூபாவாக பதிவாகியது. 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 1,77,050 ரூபாவாக பதிவாகியது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,130 ரூபாவாக பதிவாகியதுடன், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) நேற்று 1,69,000 ரூபாவாக பதிவாகியது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT