Sunday, May 19, 2024
Home » யாழ்ப்பாணத்தில் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் பேராசிரியர் வித்தியானந்தன் நூற்றாண்டு விழா

யாழ்ப்பாணத்தில் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் பேராசிரியர் வித்தியானந்தன் நூற்றாண்டு விழா

by damith
May 6, 2024 9:40 am 0 comment

பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அறக்கட்டளை மற்றும் யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரி என்பன இணைந்து யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி சரஸ்வதி அரங்கில் நூற்றாண்டு விழாவை நடத்தவுள்ளன.

எதிர்வரும் 11ஆம் திகதி மாலை 2 மணி தொடக்கம் 6 மணி வரையிலும், மறுநாள் 12ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ‘பேராசிரியர் வித்தியானந்தனின் மனப்பதிவுகள்’ கட்டுரைத் தொகுப்புநூல் வெளியிடப்படும்.

யாழ். தேசிய கல்வியற் கல்லூரியின் முதலாவது பீடாதிபதி கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் ‘விழுமியக் கல்வியின் தேவையும் போக்கும்’ எனும் தலைப்பில் பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுப் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் பேராசிரியர் வித்தியானந்தனின் அளிக்கை பாணியில், பேராசிரியர் சி. மௌனகுருவின் நெறியாள்கையில் ‘இராவணேசன் கூத்து அளிக்கை மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர் து. அயூரனின் நெறியாள்கையில் காத்தவராஜன் கூத்து அளிக்கையும் இடம்பெறவுள்ளன.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT