Saturday, May 18, 2024
Home » இலங்கையில் முதன்முறை டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்காக அறிமுகமாகும் PayBand

இலங்கையில் முதன்முறை டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்காக அறிமுகமாகும் PayBand

- சம்பத் வங்கியின் புத்தாக்க தீர்வு

by Rizwan Segu Mohideen
May 3, 2024 11:54 am 0 comment

இலங்கையில் முதன்முறையாக சம்பத் வங்கி, டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகளுக்காக அணியக்கூடிய கட்டணச் சாதனமான புரட்சிகரமான “Sampath PayBand” இனை அறிமுகப்படுத்துகிறது.

உலகளாவிய ரீதியில் தொடுகையற்ற கொடுப்பனவு முறைகளுக்கான கேள்வி தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு நிலவி வரும் இக்காலகட்டத்தில், சம்பத் வங்கி தனது சமீபத்திய கண்டுபிடிப்பான அணியக்கூடிய, பல்துறை பயன்பாடுடைய Sampath PayBand இனை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.

இந்த புதிய கொடுப்பனவு முறையானது இலங்கையில் பரிவர்த்தனை செயற்பாடுகளில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி இளைய தலைமுறையினர் மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் நாட்டம் கொண்ட நுகர்வோரின் அதிகரிக்கும் கேள்விகளைப் பூரித்தி செய்வதை உறுதி செய்கிறது. மேலும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இவ்வகையான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் மூலமாக, Sampath PayBand வசதியான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளின் புதிய சகாப்தத்தின் ஆரம்பமாக அமைகிறது.

வாடிக்கையாளர்களின் அனுபவப்பூர்வமான திருப்தி மற்றும் சிறந்த கொடுப்பனவுச் செயல்முறைகளின் ஒழுங்கமைப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட Sampath PayBand ஆனது மிகத் துல்லியமான முறையில் சிலிக்கான் இனால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளே கட்டண சிப் பொருத்தப்பட்ட ஒரு மணிக்கட்டுப் பட்டையாகும். சம்பத் வங்கி சேமிப்புக் கணக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன சாதனம் மூலம் எந்தவொரு NFC- செயற்படுத்தப்பட்ட கட்டண முனையத்திலும் ஒரு இலேசான தட்டுதல் அல்லது இச்சாதனத்தினை அதன் அருகே கொண்டு செல்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். சிரமமான பணப்பைகள், மறந்து விடப்பட்ட அட்டைகள் மற்றும் தவறவிடப்பட்ட தொலைபேசிகளின் நாட்களை இல்லாதொழித்து, Sampath PayBand ஒவ்வொரு தருணத்திலும் தன்னிகரற்ற சேவையினை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

“எமது வாடிக்கையாளர்களின் நாளுக்கு நாள் விருத்தியடைந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் நிமித்தம் புதிய விடயங்களை உருவாக்குவதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைத் தழுவுவதற்கும் சம்பத் வங்கியினராகிய நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்” என்று திரு.ஷிரான் கொஸ்சின்ன சம்பத் வங்கியின் அட்டை மையத்தின்; உதவி பொது முகாமையாளர் தெரிவித்தார்;. “Sampath PayBand எனும் அணியக்கூடிய கட்டணச் சாதனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், தடைகளற்ற மற்றும் நேர்த்தியான கொடுக்கல் வாங்கல் அனுபவத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் தொடுகையற்றதும் பணக் கையாளுகை அற்றதுமான, சிரமமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடிய சுதந்திரத்தை வழங்குகிறோம்.”

Sampath PayBand, உபயோகிப்பவர்களுக்கு எண்ணிறைந்த நன்மைகளை வழங்குகிறது.

  • வசதியானது : இலேசாக தட்டுதல் அல்லது சாதனத்தின் அருகே கொண்டு செல்வதன் மூலம் தடையின்றி பணம் செலுத்துதல்.
  • புதுமையானது : பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அதி நவீன கொடுப்பனவுத் தொழில்நுட்பத்தைத் தழுவுதல்.
  • துரிதமானது : பாரம்பரிய முறைகளைத் தகர்த்தெறிந்து விரைவான பரிவர்த்தனைகளில் ஈடுபடல்.
  • ஆக்கவளமுடையது : ஈடுபாடு மற்றும் செயற்திறனை அதிகரிக்க தொடுகையற்ற கொடுப்பனவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்.
  • வாழ்க்கை முறையோடு : வாடிக்கையாளர்களின் விருப்புகளுக்கு இணைவான நவீன ஒன்றிணைந்தது தொழில்நுட்பங்களுடன் கூடிய கொடுப்பனவு முறையாதல்.

உலகம் முழுவதும் இலத்திரனியல் பணப் பரிமாற்றங்களை எளிதாக்கும் உலகளாவிய கட்டண அட்டை சேவை நிறுவனமான VISA உடன் இணைந்து ஆரம்பித்து அறிமுகப்படுத்தப்படும் Sampath PayBand ஆனது வசதி, பாதுகாப்பு மற்றும் மன அமைதியை வழங்கி, இன்றைய நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அதிநவீன வங்கித் தீர்வுகளை வழங்கும் வங்கியின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாய் அமைகிறது.

இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்ப வசதிககளுடன் கூடிய Sampath PayBand நுகர்வோருக்கு மறுக்கமுடியாத ஒரு சலுகையாக அமைகிறது. மழை, வெயில், தொழில் அல்லது விருந்துபசாரங்கள் ஆகிய எவ்விடத்திலும் வசதியுடன் பயன்படுத்தக்கூடிய இந்த PayBand ஆனது (Gen Z) புதிய தலைமுறையினர் மற்றும் நவீன தொழில்நுட்ப உற்பத்திகளில் ஆர்வமுள்ள தலைமுறையினரின் வசதி, பல்வேறுபட்ட தெரிவுகள் மற்றும் நாகரிக பாணிக்கு ஏற்ற மிகச் சிறந்த தேர்வாகும்.

Sampath PayBand ஆனது, ஜூன் மாதம் நடுப்பகுதி முதல், தெரிவுசெய்யப்பட்ட சம்பத் வங்கிக் கிளைகளில் ஏற்கனவே வங்கிக் கணக்கைப் பேணிவரும் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வங்கிக் கணக்கினை ஆரம்பிக்கும் அனைவரும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமையும். PayBand இனை பெற்றுக்கொள்ளும் போது, வாடிக்கையாளர்களுக்குச் சாதனத்தினை இயக்குதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் பற்றிய விசேட தகவல்கள், பிரத்தியேகமான உதவிகள் வழிகாட்டுதல்கள் ஊடாக வழங்கப்படும்.

அதீத சிறப்பு மற்றும் அதி உயர் வாடிக்கையாளர் திருப்திக்கான அசையா அர்ப்பணிப்புடன் என்றும் செயற்படும் சம்பத் வங்கியானது, வங்கித் துறையில் வளர்ச்சி மற்றும் நவீன புத்தாக்கங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி தலைசிறந்து நிலை நிற்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT