பெப்ரவரி 27,1954 தவக்காலமதில் செவ்வாய்க்கிழமை இரவில் ஒரு சிறிய நகரம் வித்தியாசமான ஒன்றை செய்ய முடிவு செய்தது. யாருமே, அந்நகரத்திற்கு செல்வது கிடையாது, அதன் எதிர்காலமே இருள் மங்கிக் காணப்பட்டது. அந்நகரத்திற்கு எந்தவொரு வரலாறோ, அடையாளமோ கிடையாது,
இளையோர் அங்கு தங்குவதற்கான எந்தவொரு காரணமும் இல்லை. அங்கு எவ்வித கண்கவர் காட்சிகள், ஆறுகள், ஏரிகள், மலைகள் இல்லை. வெறும் வானவெளி மாத்திரமே இருந்தது.
யாரோ ஒருவர் கூறிய ஆலோசனையானது: “ஏன் நாம் ஒருதவறான நகர நாள் ஒன்றை வைத்திருக்கக்கூடாது?”“என்ன சொல்கிறாய்” என்கிற கேள்வி. “நகரத்தின் இருபக்க வாயில்களிலும் ‘பிழையான நகரம்’ என்று பெயர் பொறித்த பதாதையை வைப்போம்.
அவ்வாறே மக்களும் தங்களால் முடிந்தவரை அறிகுறிகள், உணவு மற்றும் தெருக்களின் திசை ஆகியவற்றில் நகரம் முழுவதும் பல தவறுகளைச் செய்ய வேண்டும்.
அனைவருமே தங்கள் வாகனங்களை பின்னோக்கி ஓட்டவேண்டும். உப்புக் கரைசலில் சீனியும்,மிளகுக் குடுவையில் கறுவாவும் இருக்கவேண்டும். காலையுணவு, இராவுணவு வேளையிலும், இராவுணவு காலையுணவு வேளையிலும் பரிமாறப்படவேண்டும்.
மக்களும் அதனை அவ்வாறே செய்தார்கள். அங்கு சென்ற மக்களும் அதனை விரும்பி அடுத்தவர்களுக்குச் சொன்னார்கள். அதனை அடுத்த பெப்ரவரியிலும் செய்தார்கள். அப்போதும் விருந்தினர்கள் வந்தார்கள். பத்து வருடங்களில் ஒவ்வொரு பெப்ரவரி 27இல் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட விருந்தினர்கள் அங்கு வருகை தந்தார்கள்.
அங்கு வைக்கப்பட்ட பொருட்களில் அதிக விற்கப்பட்ட பொருட்கள் யாதெனில், “வருடத்திற்கு ஒருமுறை தவறு செய்யுங்கள்,மற்ற நாட்களில் மக்கள் சரியாகச் செய்யும் அனைத்து விடயங்களையும் நீங்கள் பாராட்டுவீர்கள்” என்கிற வாசம் பொறிக்கப்பட்ட தேநீர் குவளைகள் மற்றும் ரீசேர்ட் என்பனவாகும்.
-அருட்தந்தை நவாஜி…