Tuesday, April 30, 2024
Home » பேச்சை மாற்றிய அப்பாஸ்

பேச்சை மாற்றிய அப்பாஸ்

by sachintha
October 17, 2023 6:02 am 0 comment

ஹமாஸ் அமைப்பை விமர்சித்து பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியதாக பலஸ்தீன அதிகாரசபையின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தி, சில மணி நேரத்திலேயே மாற்றப்பட்டது.

அப்பாஸ் மற்றும் வெனிசுவேல ஜனாதிபதி நிகலஸ் மடுரோ இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடலில், ஹமாஸின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் பலஸ்தீன மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று அப்பாஸ் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் சில மணி நேரத்தின் பின் அந்த வார்த்தைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. “பலஸ்தீன அதிகாரசபையின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் முடிவுகள் பலஸ்தீன மக்களை சட்டபூர்வமாக பிரதிநிதித்துவம் செய்வதோடு வேறு எந்த அமைப்பின் கொள்கைகளையும் அல்ல” என்று அப்பாஸ் கூறியதாக திருத்தப்பட்டிருந்தது.

இஸ்ரேல் ஆக்கிமிப்பு மேற்குக் கரையில் ஆட்சியில் இருக்கும் அப்பாஸின் பலஸ்தீன அதிகாரசபைக்கும் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT