Thursday, May 16, 2024
Home » உலக எல்லைப் பாதுகாப்பு மாநாட்டில் இந்திய கடலோர காவல்படை பிரதிநிதிகள் பங்கேற்பு

உலக எல்லைப் பாதுகாப்பு மாநாட்டில் இந்திய கடலோர காவல்படை பிரதிநிதிகள் பங்கேற்பு

by Rizwan Segu Mohideen
April 29, 2024 7:20 pm 0 comment

மேலதிகப் பணிப்பாளர் நாயகம் எஸ் பரமேஷ் தலைமையிலான இரண்டு பேர் கொண்ட இந்திய கடலோர காவல்படை தூதுக்குழு, துருக்கியின் இஸ்தான்புலில் நடத்தப்பட்ட உலக எல்லைப் பாதுகாப்பு மாநாடு- 2024 இல் பங்கேற்றது.

இந்த நிகழ்வு ஏப்ரல் 24-26 வரை இஸ்தான்புலில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

“கடல் எல்லை சவால்கள்” மற்றும் சாத்தியமான தீர்வுகள் பற்றி இந்திய கடலோர காவல்படை தூதுக்குழு ஆராய்ந்தது. இந்த நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள கடலோரக் காவல்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகவரமைப்புக்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதையும் கடல்சார் சமகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக அமைந்தது.

இந்திய கடலோர காவல்படை எக்ஸ் தளத்தில் இது தொடர்பான இடுகையைப் பகிர்ந்துள்ளது.

இந்தியாவும் துருக்கியும் வரலாற்று முக்கியத்துவமான தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. 1948 இல் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டன .

அண்மைக் காலமாக இரு நாட்டுத் தலைவர்களின் வருகைப் பரிமாற்றத்தால் இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளன.மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பாராளுமன்ற பிரதிநிதிகள் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.பாராளுமன்ற உறுப்பினர்கள் பலதரப்பு பாராளுமன்ற மாநாடுகளிலும் பரஸ்பரம் உரையாடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT