Tuesday, May 21, 2024
Home » நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் நிலவும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் நிலவும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு

by sachintha
April 30, 2024 9:42 am 0 comment

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் நிலவுகின்ற சில‌ அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரிக்கு அண்மையில் வருகை தந்த கல்வி இராஜாங்க அமைச்சர் கம்பளை கல்வி வலயத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான சீருடைகள் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்தாவது,

கதிரேசன் மத்திய கல்லூரியினை முழு எண் மயமாக்கல் திட்டங்களில் ஓரங்கமாக கம்பளை கல்வி வலயத்தில் முதலாவது பாடசாலையாக அமைத்து தருவேன். கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கம்பளை வலய கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்கள் பங்கேற்றிருந்தனர். கதிரேசன் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களாகிய தேசபந்து இரா.சிவயோகன், சு.சதீஸ்குமார், நா.பரமேஷ்வரன் ஆகியோரின் பூரண ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT