Thursday, May 9, 2024
Home » OrphanCare உடன் உலக நீர் தினத்தை அர்த்தமாக்கிய American Premium

OrphanCare உடன் உலக நீர் தினத்தை அர்த்தமாக்கிய American Premium

by Rizwan Segu Mohideen
March 28, 2024 3:52 pm 0 comment

மூன்று தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, American Premium Water Systems என்பது இலங்கையின் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் விற்பனையில் முன்னோடியாக திகழ்வதுடன், இலங்கையர்களின் தாகத்தை தீர்க்கும் தூய்மையான, சுகாதாரமான நீராகவும் அமைந்துள்ளது. சர்வதேச நீர் தினத்தை உலகம் அனுஷ்டித்திருந்த நிலையில், கூட்டாண்மை சமூகப்பொறுப்புணர்வுக்கான American Water இன் அர்ப்பணிப்பு, சுயாதீன காப்பகமான OrphanCare உடன் அவர்கள் கைகோர்த்திருந்ததனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அநாதரவான சிறுவர்கள் காப்பகத்திலிருந்து பராயமடைந்தவர்களாக வெளியேறும் போது அவர்களின் வாழ்க்கையில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் ஆக்கம் 2இல் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் பிரகாரம், அவர்களின் இனம், மதம், வர்ணம் அல்லது வர்க்கம் என எவ்வித பாகுபாடுமின்றி உள்ளடக்கத்தை உறுதி செய்வதிலும் இந்த காப்பகம் கவனம் செலுத்துகின்றது. இந்தப் பங்காண்மையின் அங்கமாக, American Premium Water Systems இனால் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 19 லீற்றர் குடிநீர் போத்தல்களிலிருந்தும் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த காப்பகத்திலுள்ள அநாதரவான சிறுவர்களின் எதிர்காலத்துக்காக பங்களிப்புச் செய்யப்படவுள்ளது. 

2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட OrphanCare இனூடாக, அநாதரவான சிறுவர்களின் கவனம் செலுத்தப்படாத முக்கியமான தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், அதனூடாக அந்த அநாதரவான சிறுவர்கள் 18 வயதை எய்தியதும், காப்பகத்தின் பராமரிப்பிலிருந்து வெளியே செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருப்பதாகும்.

American Premium Water Systems இன் குழும முகாமைத்துவ பணிப்பாளர் எம் எச் எம் பசால் கருத்துத் தெரிவிக்கையில், “American Water இல் விற்பனையாகும் ஒவ்வொரு போத்தலும் புத்துணர்வூட்டுவது மாத்திரமன்றி, மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. OrphanCare நிதியத்துடனான எமது பங்காண்மையினூடாக, ஒவ்வொரு போத்தலின் விற்பனையினூடாக கிடைக்கும் வருமதியின் ஒரு பகுதி, அநாதரவாக்கப்பட்ட சிறுவர்கள் தமது வாழ்வில் இரண்டாவது முறையாகவும் அநாதரவாக்கப்படுவதை தவிர்ப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, எமது நீரை தெரிவு செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உங்களுக்கு நீர் நீரூட்டத்தை வழங்குவது மாத்திரமன்றி, அநாதரவான சிறுவர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கும் பங்களிப்புச் செய்கின்றீர்கள். இது ஒரு எளிமையான செயற்பாடு என்பதுடன், பெருமளவு தாக்கத்தை தோற்றுவிக்கக்கூடியது. அதனூடாக, ஒவ்வொரு துளியும், நேர்த்தியான மாற்றத்தை உறுதி செய்வதாக அமைந்திருக்கும்.” என்றார். 

பங்காண்மை தொடர்பில் OrphanCare இன் தலைமை அதிகாரி அசாத் சஹீத் கருத்துத் தெரிவிக்கையில், “OrphanCare இல் எமது நோக்கம் என்பது, அநாதரவான சிறுவர்களுக்கு தமக்கென சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஆதரவையும், வளங்களையும் வழங்குவதாகும். எமது பங்காளராக இணைந்து கொள்வதற்கு முன்வந்தமைக்காக American Premium Water க்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இதனூடாக ஒவ்வொரு அநாதரவான பிள்ளையையும் எமது ஆதரவு சென்றடைந்து, அவர்களின் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள பங்களிப்பு வழங்குவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும்.” என்றார்.

அமானா வங்கியை ஸ்தாபக அனுசரணையாளராகக் கொண்டுள்ள OrphanCare, அநாதரவான சிறுவர்களை அரவணைத்து வழிநடத்தும் சூழலை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையில் இரண்டாவது தடவையாகவும் அநாதரவாக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் செயலாற்றுகின்றது. இந்த காப்பகத்தின் சகல நிர்வாக மற்றும் செயற்பாட்டு செலவுகளையும் அமானா வங்கி முழுமையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த காப்பகத்துக்காக நன்கொடை வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் சம்பந்தப்பட்ட அனுகூலம் பெறுவோரை சென்றடைவதை அமானா வங்கி உறுதி செய்கின்றமை விசேட அம்சமாகும். இதுவரையில் OrphanCare இல் 3000 க்கும் அதிகமான அநாதரவானவர்கள் நாடு முழுவதிலும் காணப்படும் 90 க்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படுகின்றனர்.

OrphanCare பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், பங்காண்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கு காணப்படும் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் www.orphancare.org எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது 011 775 6 775 ஊடாக தொடர்பு கொள்ளவும்.

சமூக சேவையில் அதிகளவு ஈடுபாடு கொண்ட காப்பாளர்கள் குழுவினால் OrphanCare நிதியம் நிர்வகிக்கப்படுகின்றது. இதன் நிர்வாகிகளாக ருஸ்லி ஹுசைன் (இலங்கை ரொட்ராக்ட் அமைப்பின் ஸ்தாபகர்), காப்பகத்தின் செயலாளர் செல்வி. பி. சிரீன் வொட்சன், பொருளாளர் ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல் (முன்னாள் தலைவர் AAT), தேசபந்து திலக் டி சொய்ஸா (ஹெல்பேஜ் ஸ்ரீ லங்கா தவிசாளர்), ஹர்ஷ அமரசேகர (ஜனாதிபதி சட்டத்தரணி), கே.ஆர். ரவீந்திரன் (தவிசாளர், அமெரிக்க ரொட்டரி மையத்தின் காப்பாளர் குழு மற்றும் ரொட்டரி இன்டர்நஷனல் முன்னாள் தலைவர்), ஷரத் அமலீன் (இணை ஸ்தாபகர் MAS ஹோல்டிங்ஸ்), ஒஸ்மான் காசிம் (அமானா வங்கி ஸ்தாபகர்), தியாப் அக்பராலி (சிரேஷ்ட பணிப்பாளர் அக்பர் பிரதர்ஸ்) மற்றும் மொஹமட் அஸ்மீர் (அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும்) ஆகியோர் காணப்படுகின்றனர். உயர் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்காக உறுதியான ஆளுகை கட்டமைப்பை காப்பாளர்கள் நிறுவியுள்ளதுடன், அதனூடாக நிதியத்தின் நீண்ட கால நிலைபேறாண்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT