Saturday, April 27, 2024
Home » UNRWA நிதியத்தின் செயற்பாடுகளுக்கு சவூதி வழங்கிய 40 மில்லியன் டொலர்

UNRWA நிதியத்தின் செயற்பாடுகளுக்கு சவூதி வழங்கிய 40 மில்லியன் டொலர்

by mahesh
March 27, 2024 8:00 am 0 comment

இரண்டாம் உலக யுத்தம் தொடக்கம் அல்லல்படும் பாலஸ்தீன அகதிகளுக்காக சர்வதேச ரீதியாக நிவாரணங்களை வழங்கும் ஐ. நாவின் நிதியமே (United Nations Relief and Works Agency for Palestine Refugees) UNRWA என்றழைக்கப்படும்.

1949 தொடக்கம் செயற்படும் ஐ. நாவின் இவ்வமைப்புக்கான மேற்கத்திய உதவிகள் திட்டமிட்ட அடிப்படையில் சென்ற மாதங்களில் குறைக்கப்பட்டதும், அதனை நிவர்த்தி செய்வதற்காக 40 மில்லியன் அமெரிக்க ​ெடாலர்களை அந்நிவாரண நிதியத்திற்காக வழங்குவதாக சவூதி அரேபியா கடந்த புதன் கிழமையன்று அறிவித்துள்ளது.

UNRWA இற்கான உதவிகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலரின் மேற்கத்திய நாடுகளுக்கான வருகையுடன் சேர்த்து சவூதி இவ்வறிவிப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேற்படி 40 மில்லியன் அமெரிக்க ​ெடாலர்கள் மூலம், நிர்க்கதிக்குள்ளான பாலஸ்தீன மக்களில் மிகவும் தேவையுடைய சுமார் 450,000 பயனாளிகள் நிவாரணத்தினை பரிபூரணமாகப் பெறவேண்டும் என்ற உறுதிமொழி உடன்படிக்கையொன்றாகக் கைச்சாத்திடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்நிதியத்தின் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள விடாது சில தீயசக்திகள் முட்டுக்கட்டையாக நிற்பது சர்வதேசத்திற்கே ஒரு இழுக்காகும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காஸாவில் பதற்றநிலை ஆரம்பமான நாள் தொடக்கம் இன்றுவரை காஸாவுக்கான நிவாரணங்களாக இருந்தாலும்சரி, இராஜதந்திர நகர்வுகளாக இருந்தாலும் சரி அவற்றை தொய்வின்றி தொடர்ந்தும் சவூதி அரேபியா மேற்கொண்டு வருகின்றது. நேற்றுமுன்தினம் நிவாரணங்கள் சுமந்த 42 ஆவது விமானம் அரீஷ் விமான நிலையத்தினை சென்றடைந்மையும். இதற்குமேலாக பல நிவாரணம் தாங்கிக் கப்பல்கள், பலநூறு கனரக கொள்கலன்கள் என நிவாரண விநியோகங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதும் பாலஸ்தீனர்களுக்கான சவூதி அரேபியாவின் உதவிகளை எடுத்துக்காட்டுகின்றன.

கலாநிதி அம்ஜத் ராசிக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT