Monday, May 6, 2024
Home » சுவாமி விபுலானந்தர் இசைநடன கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு கௌரவிப்பு விழா

சுவாமி விபுலானந்தர் இசைநடன கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு கௌரவிப்பு விழா

by Gayan Abeykoon
April 24, 2024 9:07 am 0 comment

ட்டக்களப்பு இசைநடனக் கல்லூரியில் மிக நீண்டகால அதிபராகவும், இசைவிரிவுரையாளராகவும் சேவையாற்றிய திருமதி இராஜேஸ்வரி தெட்சாணாமூர்த்தி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.  

இந்நிகழ்வினை 1982 ஆம் ஆண்டில் இருந்து இசைநடனக் கல்லூரியில் கல்விகற்ற பழைய மாணவர்கள் அனைவரும் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கின்ற, திருமதி இராஜேஸ்வரி தெட்சாணாமூர்த்தி அவர்களின் சேவைக்காலத்தினுள் கல்விகற்றபழைய மாணவர்கள் இந்நிகழ்விற்குப் பங்களிப்புச் செய்திருந்தனர்.

அவர் தமது சேவைக்காலத்தினுள் அனைத்துத் துறைசார் மாணவர்களையும் அன்போடு அரவணைத்து, கண்டிப்புடன் பயிற்றுவித்து சிறந்த மாணவர் பரம்பரையை உருவாகக் காரணமாக இருந்தவர். அவருடைய காலத்தில் கல்விகற்ற அநேக மாணவர்கள் இன்று மிகப்பெரிய பதவிகளில் இருப்பது அவரது சேவையின் மகத்துவத்திற்குச் சான்றாகும்.

மாணவர்களுடன் மட்டுமன்றி தன் சேவைக்காலத்தினுள் தன்னோடு கடமையாற்றிய அனைத்து விரிவுரையாளர்களையும் அன்பாக வழிப்படுத்தி அரவணைத்து மூத்தஆசானாக இருந்து நெறிப்படுத்தியவர். மாணவர்களின் நலனையே முழுநோக்காகக் கொண்டு செயற்பட்ட திருமதி இராஜேஸ்வரி தெட்சாணாமூர்த்தி அவர்கள் மாணவர்களது மனங்களில் தன் சேவையினால் நிறைந்திருப்பவர். அதனாலேயே அவருக்கான கௌரவிப்பு பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வானது கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஸ்ரீமத் நீலவமாதவானாந்தா ஜீ மகராஜ் அவர்களதுஆசியுரையுடன் ஆரம்பமானது. கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா பிரதமஅதிதியாகவும், எஸ். தெய்வநாயகம் (ஓய்வுநிலைஉதவிப் பணிப்பாளர்_இந்துகலாசாரஅலுவல்கள் திணைக்களம்), பேராசிரியர் சாந்திகேசவன் (இந்துநாகரிகத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம்), திருமதி திலகவதி ஹரிதாஸ் (ஓய்வுநிலை அதிபர் விவேகானந்தா மகளிர் பாடசாலை)ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

முன்னாள் அதிபரின் காலத்தில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றியோர், பழைய மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பழைய மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன. முன்னாள் அதிபர் இராஜேஸ்வரி தெட்சாணாமூர்த்தி அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பழைய மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு இனையகற்றுக் கொண்டிருக்கும் தலைமுறையினருக்குஎடுத்துக் காட்டாகஅமையவேண்டும்.

சுவாமி விபுலானந்தர் இசைநடனக் கல்லூரியில் 1982 – 1997 வரை கல்வி கற்ற பழைய மாணவர்கள் இந்நிகழ்வினை நடத்த பங்களிப்புச் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT