Friday, May 10, 2024
Home » ICC விருதுக்கு பெத்துமின் பெயர்

ICC விருதுக்கு பெத்துமின் பெயர்

by Rizwan Segu Mohideen
March 5, 2024 8:11 am 0 comment

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) பெப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் (ICC Men’s Player of the Month) இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க இடம்பெற்றுள்ளார். இந்த குறுகிய பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜய்ஸ்வால் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸனும் இடம்பெற்றுள்ளனர்.

பெத்தும் நிசங்க பெப்ரவரி மாதம் நடந்த ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டைச் சதம் பெற்ற இலங்கையின் முதல் வீரராக சாதனை படைத்திருந்தார். அந்தத் தொடரில் அவர் மேலும் ஒரு சதத்தை பெற்று தொடர் நாயகன் விருதை வென்றார். தொடர்ந்து நடந்த டி20 தொடரிலும் அவர் 30 பந்துகளில் 60 ஓட்டங்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT